Last Updated : 22 May, 2018 02:33 PM

 

Published : 22 May 2018 02:33 PM
Last Updated : 22 May 2018 02:33 PM

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 14 போலீஸார் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்கிதலில் 14 போலீஸார் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கான் போலீஸார் தரப்பில், ''ஆப்கானிஸ்தான் காஸினி மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் திக் யாக் மாவட்டத்தில் 7 பேரும், ஜகாட்டு மாவட்டத்தில் 7 பேரும் பலியாகினர். இதில் பலியானவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினர்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டு பயங்கர கட்டுப்பாடுகள் விதித்தனர். அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.

எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக ராணுவத்தினர், போலீஸாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை படிக்க மறந்துடாதீங்க...

பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தின் ஆசையை நிறைவேற்றிய தோனி

22  வருடங்களுக்கு முன்பு சுற்றுலா பயணி: தற்போது இங்கிலாந்து அரண்மனையில் இளவரசி 

வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு: முறைகேடு நடந்ததாக புகார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x