Published : 19 Jun 2024 05:19 AM
Last Updated : 19 Jun 2024 05:19 AM

அணு ஆயுத கையிருப்பை அதிகரிக்கும் சீனா: இந்தியாவை போல 3 மடங்கு அதிகம்

புதுடெல்லி: அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் உள்ளன. உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களில் 90 சதவீதம் இந்த இரு நாடுகளிடம் உள்ளன. 3-வதாக சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள் உள்ளன. உலகின் மற்ற நாடுகளை விட சீனா அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் அணு ஆயுதங்களைவிட 3 மடங்கு அதிகஅணு ஆயுதங்களை சீனா வைத்துள்ளது. சீனாவிடம் கடந்தாண்டு ஜனவரி மாத நிலவரப்படி 410 அணுஆயுதங்கள்தான் இருந்தன. 2030-ம்ஆண்டுக்குள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1,000-மாகஉயர்ந்த சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கடந்தாண்டு தெரிவித்திருந்தது.

4-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் 290 அணு ஆயுதங்களையும், 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து 225 அணு ஆயுதங்களையும் வைத்துள்ளன. 6-வது இடத்தில் உள்ளஇந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவிடம் கடந்தாண்டு 164 அணு ஆயுதங்கள் இருந்தன. இது தற்போது 172-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிடம் உள்ள அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் படைத்தவை. இதில் அணு ஆயுதங்களை இணைத்து அனுப்ப முடியும் என்பதால், இந்தியா தனது பாதுகாப்பில் உறுதியாக உள்ளது. நீர்மூழ்கி கப்பல் மூலம் அணு ஏவுகணைகளை வீசுவதை இந்தியா வலுப்படுத்த தொடங்கியுள்ளது.

7-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x