Published : 07 Jun 2024 11:49 AM
Last Updated : 07 Jun 2024 11:49 AM

D-Day கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 2-ம் உலகப் போரின் 102 வயது வீரர் மரணம்

ராபர்ட்

பெர்லின்: இரண்டாம் உலகப் போரின் D-Day 80-வது நிறைவு ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 102 வயதான கடற்படை வீரரான ராபர்ட், நியூயார்கில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நார்மாண்டிக்கு பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி படைகளின் வசம் இருந்த பிரான்ஸ் நாட்டின் பகுதியை மீட்கும் வகையில் நேச நாட்டு படைகள் நார்மாண்டியில் 1944, ஜூன் 6-ம் தேதி அன்று படைகளை இறக்கி இருந்தன. இது போரில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. போர் முடிந்த பிறகு ஆண்டுதோறும் D-Day கொண்டாட்டம் என இது கொண்டாடப்படுகிறது. இதன் 80-வது நிறைவு விழாவில் பங்கேற்க ராபர்ட் தன்னுடன் போரிட்ட சகாக்களுடன் கப்பலில் பயணம் சென்றிருந்தார்.

பயணத்தின் போது அவருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானம் மூலம் அவர் ஜெர்மனியில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பிடித்த இசையை கேட்டறிந்த மருத்துவர்கள், அதனை ஒலிக்க செய்துள்ளனர். அதனை கேட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அவரது உயிர் பிரிந்தது.

“பயணத்தின் போது அவர் ஆக்டிவாக தான் இருந்தார். அவருக்கு இருதயம் சார்ந்த பிரச்சினைகள் இருந்துள்ளன. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். பயணம் மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என மருத்துவரும் சொல்லியுள்ளார். இந்த சூழலில் தான் இது நடந்தது. அவரது உயிர் பிரிந்த போது அவருடன் சிலர் இருந்தோம். அவருக்கு பிராங்க் சினாட்ரா இசையென்றால் பிடிக்கும். அவர் உயிர் பிரிகின்ற தருணத்தில் அதனை மருத்துவர் ஒலிக்கச் செய்தார்” என மற்றொரு முன்னாள் வீரரான ரிச்சர்ட் ஸ்டீவர்ட் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்கை சேர்ந்தவர் ராபர்ட். இளம் வயதில் மாணவர் படையில் இணைந்தவர். இரண்டாம் உலகப் போர் ஏற்பட்ட போது கப்பல் படையில் அவர் சேர்க்கப்பட்டார். ரேடியோ மற்றும் மோர்ஸ் கோடு சார்ந்து சுமார் ஓராண்டு காலம் பயிற்சி பெற்றவர். அதன் பின்னர் யுஎஸ்எஸ் எல்டோராடோ கப்பலில் ஜூனியர் ரேடியோ ஆப்பரேட்டராக இரண்டாம் உலகப் போரின் போது அந்த கப்பலில் அவர் பணியாற்றினார். மவுண்ட் சூரிபாச்சியில் அமெரிக்க கொடியை நிலை நிறுத்தியதை நேரடியாக பார்த்தவர் என ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x