Published : 09 Apr 2018 07:05 PM
Last Updated : 09 Apr 2018 07:05 PM
சீனா, அமெரிக்கா இடையே வர்த்தகக் கொள்கைகளில் ஏட்டிக்குப் போட்டி நிலை இருந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் சீனாவை கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனாவும் சீனப்பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் கட்டணங்களை விதித்து கட்டணப்போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஆட்டோமொபைல் இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா அதிக வரி விதிப்பது பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கார் இறக்குமதி செய்யப்படுகிறது என்றால் 2.5% தான் வரிவிதிப்பு செய்கிறோம், ஆனால் மாறாக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஒரு கார் செல்கிறது என்றால் 25% வரி விதிக்கப்படுகிறது. இது என்ன சுதந்திர வாணிபமா, நியாய வர்த்தகமா? இது ‘முட்டாள் வர்த்தகம்’ - பல ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது.
இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
முதலில் ட்ரம்ப் சீன பொருட்களான அலுமினியம் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றின் மீது 25% கட்டணம் விதித்தார், இதற்குப் பதிலடியாக சீனா 122 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதலாக 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரி விதிப்பு மேற்கொண்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT