Published : 21 May 2024 01:03 PM
Last Updated : 21 May 2024 01:03 PM
சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை அமெரிக்காவின் எஃப்.டி.ஏ, நியூராலிங்க் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதாக தகவல்.
நியூராலிங்கின் சிப்பை முதல் முறையாக மனிதரின் மூளையில் பொருத்தி உள்ளதாக தெரிவித்தது. அண்மையில் அந்த சிப்பை பொருத்திக் கொண்ட நோலண்ட் அர்பாக் எனும் நபர் அந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். “எல்லோரையும் போல என்னால் கணினியை இயக்க முடிகிறது” என அவர் தெரிவித்தார். அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.
இரண்டாவது சிப்பை தனது மூளைக்குள் பெற உள்ள நபரின் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த சிப் முன்பை காட்டிலும் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூராலிங்க் நிறுவனம் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகள் வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.
இப்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் எஃப்டிஏ அனுமதி நியூராலிங்க் ஆய்வுப் பணியில் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. சோதனை அடிப்படையிலான இந்த ஆய்வுப் பணிகளை நியூராலிங்க் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும் என சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT