Last Updated : 25 Apr, 2018 05:16 PM

 

Published : 25 Apr 2018 05:16 PM
Last Updated : 25 Apr 2018 05:16 PM

மன ஆரோக்கியத்துக்கு பழம், காய்கறிகள் உதவுமா? அந்தப் பழங்கள், காய்கறிகள் எவை?

உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள், காய்கறிகள் உதவும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று மன ஆரோக்கியத்துக்கும் பழங்கள், காய்கறிகள் உதவும் என்பது சமீபத்தில் வெளியான ஆய்வின் புதிய தகவலாக உள்ளது.

அதாவது சமைக்கப்பட, அடைக்கப்பட்ட, பதனப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை விட பழத்தை அப்படியே சாப்பிடுவது மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதுவரை பொதுச்சுகாதார, ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரங்களெல்லாம் எவ்வளவு பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது

ஆனால் ஃப்ராண்டியர்ஸ் இன் சைக்காலஜி என்ற இதழில் வெளியான இந்த ஆய்வுக்கட்டுரையில் பழங்கள், காய்கறிகள் எப்படி சமைக்கப்படுகின்றன எப்படி உட்கொள்ளப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒடாகோ பல்கலைக் கழக உளவியல் பிரிவு மூத்த பேராசிரியர் டாம்லின் கானர், கூறும்போது, “பழங்கள், காய்கறிகளை மாற்றம் செய்யப்படாத அதன் பாகம்படா தன்மையில் எடுத்துக் கொள்வது மன ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என்பதை எங்கள் ஆய்வு தெரிவித்துள்ளது” என்றார்.

ஏனெனில் சமைக்கும் போதும், அதன் நிலையை வேறு விதங்களில் மாற்றும்போதும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காலியாகிவிடுகிறது என்கிறார் அவர்.

இந்த ஆய்வுக்காக நியூஸிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 18-25 வயதுடைய நபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதில் பழங்கள், காய்கறிகளே எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு மன ஆரோக்கிய நிலையில் தடுமாற்றம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

பழங்கள், காய்கறிகளை அதன் பாகம்படாத் தன்மையில் எடுத்துக் கொள்வதோடு பயிற்சி, தூக்கம், டயட், நீண்ட நாள் ஆரோக்கியம், சமூகப் பொருளாதார அந்தஸ்து, இனம், பாலினம் ஆகிய மக்கள்தொகையியல் கூறுகளும் இந்த ஆய்வுக்கு அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டது.

இத்தகைய பாகம்படா பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளும்போது மனச்சோர்வு, கவலை போன்றவைகள் குறைவதையும் மன ரீதியாக ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதையும் நாங்கள் ஆய்வில் கண்டோம் என்கிறார் கானர்.

இதற்காக பாகம் செய்யாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு 10 பழங்கள், காய்கறிகளை இந்த ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்: கேரட், வாழைப்பழம், பச்சை இலையடந்த காய்கறிகள், பசலைக்கீரை, திராட்சை, கீரை வகைகள், சிட்ரஸ் பழங்கள், வெள்ளரிக்காய், கிவி பழங்கள், பிரெஷ் பெரிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x