Published : 08 Aug 2014 10:00 AM
Last Updated : 08 Aug 2014 10:00 AM

‘கியூரியாஸிட்டி செவ்வாயில் இறங்கி 2 ஆண்டு நிறைவு

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிய ‘கியூரியாஸிட்டி' ரோவர் விண்கலம் அந்த கிரகத்தில் தரையிறங்கி வியாழக்கிழமையுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பதைப் பற்றி ஆராய்வதற்கு அனுப்பப்பட்ட ஆளில்லா ரோவர் விண்கலம், 2012 ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாய்க் கிரகத்தில் உள்ள கேல் க்ரேட்டர் எனும் ஏரியில் இறங்கியது.

அதனுடைய முதல் ஆண்டில் செவ்வாயில் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கேற்ற சுற்றுச்சூழல் இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய்ந்தது. அங்கு உள்ள படிமப் பாறைகளை ஆய்வு செய்ததில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இதுகுறித்து 'கியூரியாஸிட்டி' ரோவர் விண்கலத் திட்டத்தின் இயக்குநர் ஜான் கிராட்சிங்கர் கூறியதாவது: செவ்வாய்க் கிரகத் தில் உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பது பற்றி ஆராய்வதுதான் ரோவர் விண்கலம் அங்கு தரையிறங்

குவதற்கு முன்பு எங்களுக்கு இருந்த குறிக்கோள். தற்போது அங்கு தண்ணீர் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இனி, செவ்வாயில் சுற்றுச்சூழல் விஷயங்கள் எப்படி பரிணமித்தன என்பது குறித்து ஆராய வேண்டும். செவ்வாயில் உள்ள ‘சபிரிஸ்கி பீடபூமி' யில் ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டதால் அதன் சக்கரங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் விண்கலம் வேறு பாதையில் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

2016-ல் அந்தக் கிரகத்தின் உள்ளே ஆழமாகச் சென்று ஆய்வுகள் நடத்த ‘இன்சைட்' எனும் விண்கலம் அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x