Last Updated : 05 Apr, 2018 11:51 AM

 

Published : 05 Apr 2018 11:51 AM
Last Updated : 05 Apr 2018 11:51 AM

8.7 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டதாக புதிய தகவல்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு, ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து 8.7 கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம், அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.

இதில், 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சுமார் 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுளகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்தியாவிலும் சில தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் 'ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதையடுத்து, தவறுகள் நடந்துள்ளதை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 8.7 கோடி மக்களின் தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த தொழிற்பிரிவு அதிகாரி மைக் ஷ்ரோப்பர் கூறியதாவது:

‘‘மொத்தம் 8.7 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் அமெரிக்க மக்களுடைய தகவல்களே பகிரப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 11 லட்சம் பயனாளர்களின் தகவல்களும் பகிரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க சில நடவடிக்கைகளை ஃபேஸ்புக் மேற்கொண்டு உள்ளது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x