Last Updated : 10 Apr, 2018 02:16 PM

 

Published : 10 Apr 2018 02:16 PM
Last Updated : 10 Apr 2018 02:16 PM

ஏமனில் சவுதி வான்வழித் தாக்குதல்: 17 பேர் பலி

ஏமனில் சவுதிப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஏமன் அதிகாரிகள் தரப்பில், "ஏமனில் தென்மேற்கு நகரமான டைஸ்ஸில் சவுதிப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் பலியாகினர். மேலும் சாதாவில் நடத்தப்பட்ட மற்றுமொரு வான்வழித் தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் பலர் காயமடைந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் ஏமன் அரசுக்கு ஆதரவாகவும், கிளர்ச்சியாளர்கள் ஆதரவாகவும் சவுதி அரசாங்கம் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

சவுதி தலையீடு ஏமனில் ஏற்பட்டது முதல், இதுவரை 7,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x