Published : 18 Apr 2024 12:19 PM
Last Updated : 18 Apr 2024 12:19 PM

உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய ஏர்போர்ட்கள்

டெல்லி விமான நிலையம்

புதுடெல்லி: உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான Skytrax நேற்று (17 ஏப்ரல்) ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில் (Frankfurt) நடந்த நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தோஹாவின் ஹமாத் இன்டர்நேஷனல் விமான நிலையம் (கத்தார்) முதல் இடத்திலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

சிங்கப்பூரின் சாங்கி இரண்டாவது இடத்தில் வந்தாலும் ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் சாங்கி விமான நிலையம் உலகிலேயே சிறந்த குடிநுழைவுச் சேவைகளை வழங்கும் விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தென் கொரியாவின் சியோல் இஞ்சியோன் விமான நிலையம் மூன்றாவது இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் நான்காவது இடத்திலும் உள்ளது.

சாங்கி - சிங்கப்பூர்: உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களில் ஒன்று சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். உயரமான பகுதியில் அமைந்துள்ள விமான நிலையம் இது. நீச்சல் குளத்துடன் ஓய்வு விடுதிகள், திரையரங்கம் என பல வசதிகளைக் கொண்டுள்ளது. லாஸா ஓட்டல் இங்கு உள்ளது. 1981 ல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தை சிங்கப்பூர் அரசு நிர்வகித்து வருகிறது. இங்கு 3 முனையங்கள் உள்ளன. சாங்கி விமான நிலையம் 2023 இல் சிறந்த விமான நிலைய விருதை வென்றது. குறிப்பிடத்தக்கது.

4 இந்திய விமான நிலையங்கள்: முதல் பட்டியலில் நான்கு இந்திய விமான நிலையங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. டெல்லி விமான நிலையம் பட்டியலில் 36 வது இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் மும்பை விமான நிலையம் 95 வது இடத்தில் உள்ளது. பெங்களூரு விமான நிலையம் 59 வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் விமான நிலையம் 61 வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பின்வருமாறு:

  • தோஹா - ஹமாத் விமான நிலையம்
  • சிங்கப்பூர் - சாங்கி விமான நிலையம்
  • சியோல் - இன்சியான் விமான நிலையம்,
  • டோக்கியோ - ஹனேடா விமான நிலையம்
  • டோக்கியோ - நரிடா விமான நிலையம்
  • பாரிஸ் - சார்லஸ் டி கோல் விமான நிலையம்
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - துபாய் விமான நிலையம்
  • ஜெர்மனி - முனிச் விமான நிலையம்
  • ஸ்விட்சர்லாந்து - சூரிச் விமான நிலையம்
  • துருக்கி - இஸ்தான்புல் விமான நிலையம்
  • ஹாங்காங்
  • ரோம் ஃபியூமிசினோ
  • வியன்னா
  • ஹெல்சின்கி-வான்டா
  • மாட்ரிட்-பராஜாஸ்
  • சென்ட்ரேர் நகோயா
  • வான்கூவர்
  • கன்சாய்
  • மெல்போர்ன்
  • கோபன்ஹேகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x