Published : 14 Apr 2024 05:15 PM
Last Updated : 14 Apr 2024 05:15 PM

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

ஈரான் தாக்குதல்

புதுடெல்லி: ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் இந்திய தூதரகம் அவர்களை வலியுறுத்தியது.

சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ளவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்கள் தூதரகத்தை தொடர்புகொள்ளவும் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

+972-547520711, +972-543278392 ஆகிய உதவி எண்களை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in. இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி இந்திய தூதரகம் அந்நாட்டு இந்தியர்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அவர்களை வலியுறுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x