Published : 09 Apr 2024 05:24 AM
Last Updated : 09 Apr 2024 05:24 AM
மாபுடோ: தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாக மொசாம்பிக் குடியரசு உள்ளது. இந்த நாட்டின் வடக்கு கடற்கரை வழியாக ஒரு மீன்பிடி படகில் நேற்று சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நோக்கி அந்தப் படகு வந்தபோது எடை தாங்காமல் படகு மூழ்கியுள்ளது.
இதில் அதிலிருந்த 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக நம்புலா மாகாணச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறும்போது, ‘‘அதிகம் பேர் பயணித்ததாலும், மோச மான நிலையில் இருந்ததாலும் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர்குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 5 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். மேலும், பலரை தேடி வருகிறோம்.
ஏராளமான நபர்களின் உடல்களை மீட்டுள்ளோம். நம்புலா பகுதியில் காலரா பரவுவதாக தகவல் வந்தது. இதனால் ஏற்பட்டபீதியின் காரணமாக பெரும்பாலான மக்கள் அங்கிருந்து படகு மூலம் தப்பிக்க முயன்றனர். அப்போதுதான் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது’’ என்றார்.
இதுதொடர்பாக விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள தாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT