Published : 08 Apr 2024 06:59 AM
Last Updated : 08 Apr 2024 06:59 AM
ஹைதராபாத்: அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் தெலுங்கு மாணவர் உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரோடு சேர்ந்து அமெரிக்காவில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். கொலை, விபத்து, மர்ம உயிரிழப்பு மற்றும் இதர விஷயங்கள் இந்திய மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளன. அமெரிக்காவில் ஏற்கெனவே 13 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது 14-வது மாணவனாக சாய் கட்டே என்பவர் உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு கேள்விக்குறி: இதனால் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உளவுப் பிரிவு எப்பிஐ விசாரணை நடத்த வேண்டும் என ‘தி குளோபல் இந்து ஹெரிடேஜ் அறக்கட்டளை’ சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர் களின் உயிரிழப்பு கவலை அளிப்பதாக, 175 கடிதங்கள் வந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT