Published : 15 Feb 2018 12:02 PM
Last Updated : 15 Feb 2018 12:02 PM
2018 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 18 பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பள்ளியின் மாணவர்கள் உட்பட 18 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பெயர் நிகோலஸ் க்ரூஸ் என்றும் தெரியவந்துள்ளது.
போலீஸார் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் 2018 ஆம் அண்டு பள்ளிகளில் 18 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை எந்த அளவு அதிகரித்துள்ளது எனவும் அவை கவலை தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம், பள்ளி ஒன்றில் சிறுவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து டெக்ஸாஸ், வாஷிங்டன், கலிபோர்னியா ஆகியவற்றிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன.
கடந்த 2013 முதல், அமெரிக்காவில் 291 பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து புளோரிடா மாகாண செனட்டர் பில் நெல்சன் கூறும்போது, "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நாம் வழக்கமான ஒன்றாக எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோமா?" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கி உரிமத்துக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாவே குரல் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT