Last Updated : 19 Feb, 2018 05:26 PM

 

Published : 19 Feb 2018 05:26 PM
Last Updated : 19 Feb 2018 05:26 PM

மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம்

மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், "மெக்சிகோவின் சாண்டா கேட்ரினா, ஒசாகா ஆகிய நகரங்களில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9  ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 40 மீட்டர்ஸ் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

முன்னதாக, மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டரில் 7.2 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x