Published : 14 Feb 2018 11:47 AM
Last Updated : 14 Feb 2018 11:47 AM
மனுதார் ஒருவர் காதலர் தினம், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தை திணிக்கிறது என்றும், இஸ்லாம் மத போதனைகளைக்கு எதிராக உள்ளது என்றும் கூறி கடத்த வருடம் இஸ்லமாபாத் நீதிமன்றத்தில் காதலர் தினத்துக்கு தடை கூறி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் முதல் பாகிஸ்தானில் காதலர் தினம் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தொலைக்காட்சி, வானொலிகளில் காதலர் தினம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 'காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் ஊடகங்கள் உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில் இது தொடர்பான எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹூசைன் காதலர் தினம் இஸ்லாமின் பாரம்பரியம் அல்ல அது மேற்கத்திய நாடுகளின் பாரம்பரியம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறியிருந்தார்.
#ValentinesAndIslam என்ற ஹாஷ்டேக்கை உபயோகித்து பாகிஸ்தான் நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
காதலர் தின தடையினால் வணிகர்கள் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT