Published : 06 Feb 2018 11:38 AM
Last Updated : 06 Feb 2018 11:38 AM
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 4 குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு ஒன்று கூறும்போது, ''சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் திங்கட்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் நான்கு குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகினர். பெய்ட் சாவா நகரத்தில் சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் பலியாகினர். இதில் இரண்டு பேர் குழந்தைகள். ஹசா நகரத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 6 பேர் பலியாகினர். சிரியாவின் மற்றுமொரு மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 80 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து சிரியாவின் கிழக்கு ககவுடா பகுதியில் கடந்த ஒருவாரமாக பொதுமக்கள் பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டிள்ளது.
பொதுமக்கள் மீது குளோரின் உபயோகிக்கிறதா சிரியா?
சிரியாவில் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் ரஷ்யாவின் உதவியுடன் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் சிரிய அரசு பொதுமக்கள் மீது ரசாயனங்களை உபயோகிக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் இம்மாதத்தில் குடிமக்கள் பகுதியில் நடத்தப்பட்ட இரு வான்வழித் தாக்குதல்களில் குளோரின் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக அந்நாட்டில் நடந்து வரும் உள் நாட்டுப் போரில் இதுவரை 3,40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT