Published : 02 Feb 2018 03:56 PM
Last Updated : 02 Feb 2018 03:56 PM
அமெரிக்காவில் 12வயது பள்ளி மாணவி, வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டபோது, குண்டு தவறுதலாக சக மாணவர் மீது பாய்ந்தது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நடுநிலை பள்ளி ஒன்றில் வகுப்பறைக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு ஆசிரியர் ஜோர்டன் வெலென்சூலா ஓடி வந்து பார்த்தார். அப்போது மாணவர் ஒருவர் குண்டடிப்பட்டு கிழே விழுந்து கிடந்தார். அருகில் 12 வயது மாணவி ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டு இருந்தார். மேலும் மற்றொரு குண்டு, அறையின் ஜன்னல் கண்ணாடியை பதம் பார்த்தது.
உடனடியாக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவியிடம் விசாரித்ததில் சக மாணவர்கள் வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வருமாறு கூறியதால் எடுத்து வந்தாகவும், தவறுதலாக அது வெடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து பள்ளி கவனக்குறைவுடன் இருந்ததாகவும், துப்பாக்கியை பயன்படுத்திய மாணவி மீதும், போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவி துப்பாக்கியை கொண்டு வந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்தது குறித்த தகவல் பரவியதும் ஏராளமான பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT