Published : 26 Feb 2018 03:52 PM
Last Updated : 26 Feb 2018 03:52 PM
சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் சிரிய அரசுப் படைகள் கடத்த ஒருவாரமாக கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி வருவதை சிரிய சிறுவன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
இந்த நிலையில் கவுடாவில் அரசுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலை முகமத் நஜிம் என்ற பதினைந்து வயது சிறுவன் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
வீடியோவில் நஜீம், ”என் பெயர் முகமத் நஜிம். எனக்கு 15 வயது. நான் பஷார் அல் ஆசாத் செய்யும் குற்றங்களை உங்களிடம் கொண்டு வர போகிறேன். மக்கள் குண்டுவீச்சுகளுக்கு இடையில் பசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு நடப்பதை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது.
இங்கு இன அழிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இப்பகுதியில் சிரிய அரசையும், ரஷ்யாவையும் போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம். இதுதான் எனது கருத்தும் இங்குள்ள குழந்தைகள் கருத்தும். உங்கள் மனசாட்சிக்கே நாங்கள் விட்டுவிட்டோம். நாங்கள் அமைதியாக வாழவேண்டும். நாங்கள் தொடர்ந்து உங்கள் அமைதியால் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறோம்.
பஷார் அல் ஆசாத், புதின், கொமைனி எங்களது குழந்தைப் பருவத்தைப் கொல்கிறார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் ஏற்கனவே மிகுந்த தாமதமாகிவிட்டது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.
வீடியோவில் குழந்தைகள் பலரும் சர்வதேச சமூகத்தினரிடம் ''எங்களுக்கு உதவுங்கள்'' என்று உதவி கேட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT