Published : 11 Feb 2018 07:48 PM
Last Updated : 11 Feb 2018 07:48 PM
மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 71 பேர் பலியானார்கள்.
மாஸ்கோவின் டோமிடிடோவோ விமான நிலையத்தில் இருந்து ரசாடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 'தி அனடோனோவ் அன்-148' என்ற விமானம் ஒர்க் மாநிலத்தில் உள்ள உரல் நகருக்கு இன்று புறப்பட்டது.
விமானத்தில் 6 ஊழியர்களும், 65 பயணிகளும் என மொத்தம் 71 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களில் ரேடாரின் கட்டுப்பாட்டை விட்டு விலகியது.
அந்த விமானம், மாஸ்கோ நகரின் புறநகர் கிராமமான ராமன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள அர்குனோவாவில் விழுந்து நொறுங்கியது அதன்பின்னர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 71 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதை அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலர் பார்த்துள்ளனர்.
விமானம் விழுந்த இடத்தில் பரவலாக விமானத்தின் பாகங்கள் சிதைத்து எரிந்து கிடக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் கிடைத்ததையடுத்து, மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். ஏறக்குறைய 150க்கும் மேற்பட்டோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய மீட்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவும், எதிரில் வருபவர் தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் நிலவுகிறது. இதன் காரணமாக இந்த விபத்து நடத்து இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த விமான விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சரடோவ் ஏர்லைன்ஸ் விமானம் 7 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT