பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்
பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்

உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

Published on

புதுடெல்லி: மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியது.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக 78 சதவீதம் பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 65 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 63 சதவீத வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 52 சதவீத வாக்குகள் பெற்ற 4-ம் இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 51 சதவீத வாக்குகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளார்.

பிரேசில் அதிபர் டி சில்வா 46 சதவீத வாக்குகளுடன் 6-ம் இடத்தில் உள்ளார். ஆஸி.பிரதமர் அந்தோணி அல்பனேசி 45 சதவீத வாக்குகள் பெற்று 7-ம் இடத்தில் உள்ளார். இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 41 சதவீத வாக்குகள் பெற்று 8-ம் இடத்தில் உள்ளார். ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 39% வாக்குகள் பெற்று 9-ம் இடத்தில் உள்ளார். பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு 38% வாக்குகளுடன் 10-ம் இடத்தில் உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in