Published : 19 Feb 2024 06:13 AM
Last Updated : 19 Feb 2024 06:13 AM
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் அமைந்திருக்கிறது ‘ தி மேசன் ஜார் கஃபே’. இந்த உணவகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு மார்க் என்பவர், காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அவர் சாப்பிட்டதற்கான தொகை 32 டாலர் (ரூ.2,650). இதற்கான பில்லை அவரது மேஜையில் பணியாளர் வைத்துச் சென்றுள்ளார்.
சில நிமிடம் கழித்து வந்து அந்த பில்லை எடுத்துப் பார்த்த பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அந்தப் பில்லில் டிப்ஸ் பிரிவில் 10 ஆயிரம் டாலர் என்று எழுதப்பட்டிருந்தது. பொதுவாக அந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பில் தொகையில் 15% – 25% வரையிலேயே டிப்ஸ் வழங்குவது வழக்கம். ஆனால், மார்க் 30,835% டிப்ஸாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அந்த பணியாளர் உணவகத்தின் மேலாளரிடம் தெரிவித்தார். உடனே, மேலாளர் டிம் ஸ்வின்னி, அந்த வாடிக்கையாளரிடம் சென்று, “டிப்ஸ் தொகையில் 10 ஆயிரம் டாலர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தவறுதலாக எழுதிவிட்டீர்களா” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “இல்லை. அந்தத் தொகையைத்தான் நான் டிப்ஸாக வழங்க விரும்புகிறேன்” என்றார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய ஆத்ம நண்பர் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்குக்காகவே நான் இந்த ஊருக்கு வந்துள்ளேன். நண்பரின் நினைவாக இந்த டிப்ஸை வழங்க விரும்பினேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT