Last Updated : 17 Feb, 2018 03:40 PM

 

Published : 17 Feb 2018 03:40 PM
Last Updated : 17 Feb 2018 03:40 PM

எத்தியோப்பியாவில் அவசர நிலை பிரகடனம்

எத்தியோப்பிய பிரதமர் ஹைலிமரியம் தேசாலென் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமராக ஹைலிமரியம் தேசாலென் 2012 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹைலிமரியம் தேசாலெனின் ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை, ஊழக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசுக்கு எதிராக நடந்தப்பட்ட போராட்டத்தில்  பல மக்கள் கொல்லப்பட்டனர்.

ஹைலிமரியம் தேசாலென் ஆட்சியில் எத்தியோப்பியாவில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஹைலிமரியம் வெள்ளிக்கிழமை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர நிலை எப்போது தகர்த்தப்படும் என்று  எத்தியோப்பியா அரசு சார்பில்  குறிப்பிடப்படவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x