Last Updated : 23 Feb, 2018 03:21 PM

 

Published : 23 Feb 2018 03:21 PM
Last Updated : 23 Feb 2018 03:21 PM

இருதய நோயாளிகளின் பாதுகாப்பான உடற்பயிற்சிக்கு உதவும் பீட்ரூட் சாறு!

இருதய நோயாளிகளின் உடற்பயிற்சித்திறனை மேம்படுத்த பீட்ரூட் சாறு உதவுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

இருதய நோயாளிகளின் உடற் பயிற்சித் திறன் என்பது அவர்கள் ஆயுளைக் கூட்டுவதோடு அவர்களின் அன்றாட நோய்த்தாக்கமற்ற இருப்பையும் உறுதி செய்கிறது என்கிறது இந்த அமெரிக்க ஆய்வு.

பீட்ரூட் சாற்றில் உள்ள டயட்டரி நைட்ரேட் என்பதன் தாக்கத்தை இவர்கள் ஆய்வு செய்தனர். இதற்காக இருதய நோயாளிகள் 8 பேரை ஆய்வுக்கு அழைத்தனர். அதாவது இருதயத் தசை திறம்பட சுருங்காமல் போதிய ஆக்சிஜன் ரத்தத்திற்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

உலகம் முழுதும் இருதய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர், இவர்களில் பாதிப்பேருக்கு இருதய தசை திறம்பட சுருங்குவதில்லை இதனால் ஆக்சிஜன் போதாமை ஏற்படுகிறது. இதனால்தான் இவர்களுக்கு பெரும்பாலும் மூச்சிரைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இத்தகைய நிலைமைகளினால் பலர் உடற்பயிற்சியையே நிறுத்த நேரிடுகிறது.

பீட்ரூட் சாறு இதற்கு விடையளிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது, அதாவது பீட்ரூட் சாறு ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதால் உடற்பயிற்சியை சிரமமில்லாமல் மேற்கொள்ள முடியும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது இருதய நோயாளிகளுக்கு பீட்ரூட் ஜூஸ் உள்ளிட்ட நைட்ரேட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இருதய தசை வலுவடைகிறது .

உடற்பயிற்சி செய்யும் போது இந்த நைட்ரேட்கள் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம், இருதய ஆரோக்கியம் ஆகியவை பராமரிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. பொதுவாக நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது உடலுக்குள் மேலும் ஆக்சிஜனைக் கொண்டுவர மூச்சு விடுதல் அதிகரிக்கிறது. இதற்கு பீட்ரூட் ஜூஸ் உள்ளிட்ட நைட்ரேட்கள் உதவுகின்றன.

இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் கார்டியாக் ஃபெயிலியூர் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x