Last Updated : 02 Feb, 2018 05:37 PM

 

Published : 02 Feb 2018 05:37 PM
Last Updated : 02 Feb 2018 05:37 PM

லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 90 பேர் நீரில் மூழ்கி பலி?

லிபியா கடலோர பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 90 பேர் கடலில் மூழ்கினர். அவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரை பாதுகாத்துக்கொள்ளவும், வறுமையில் இருந்து விடுபடும் பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதுபோலவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஏராளமானோர் அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் செல்லும் படகுகள் அவ்வப்போது நடுக்கடலில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், லிபியா கடலோர பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 90 பேர் மூழ்கினர். 10 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்கள் இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x