Published : 26 Feb 2018 12:40 PM
Last Updated : 26 Feb 2018 12:40 PM
கிளர்ச்சியாளர்கள் பகுதியான கிழக்கு கவுடாவில் சிரியா அரசு ரசாயன தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
இந்த நிலையில் சிரிய அரசு வான்வழி தாக்குதலில் குளோரின் வாயுவை பயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான செய்தியை சிரியாவின் ஓரியண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிரியா கண்காணிப்புக் குழு கூறும்போது, “கவுடாவில் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள். இதில் இறந்தவர்களின் மருத்துவ அறிக்கையின் மூலம் சிரிய அரசு ரசாயன தாக்குதலை நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலருக்கு சுவாச குறைப்பாடு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் கூறும்போது, ”மூன்று வயது குழந்தை ஒன்று முச்சு திணறலில் இறந்தது. அவர்கள் தாக்குதலுக்கு குளோரின் வாயுவை உபயோகித்துள்ளனர் என்று சந்தேகிக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT