Published : 30 Dec 2023 12:54 AM
Last Updated : 30 Dec 2023 12:54 AM
இம்பால்: மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 10.01 மணி அளவில் இந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இருந்து சுமார் 208 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. கடந்த 26-ம் தேதி சத்தீஸ்கர் மற்றும் 27-ம் தேதி அசாம் மாநிலத்தில் நில அதிர்வு உணரப்பட்டது.
மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன. இருந்தாலும் வேறு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Earthquake of Magnitude:4.6, Occurred on 29-12-2023, 22:01:19 IST, Lat: 25.14 & Long: 96.54, Depth: 120 Km ,Location: 208km E of Ukhrul, Manipur, India for more information Download the BhooKamp App https://t.co/sa2yGS6EAo@Dr_Mishra1966 @KirenRijiju @ndmaindia @Indiametdept pic.twitter.com/iJSL9aDNbD
— National Center for Seismology (@NCS_Earthquake) December 29, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment