Published : 13 Jan 2018 06:03 PM
Last Updated : 13 Jan 2018 06:03 PM
ஈரான்னுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரும் ட்ரம்ப்பின் யோசனையை அந்நாடு நிராகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் இன்று (வெள்ளிக்கிழமை) கூறும்போது, "டொனால்ட் ட்ரம்ப் கூறுவது போல் 2015-ல் உலக வல்லரசுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்த எந்த மாற்றத்தையும் ஏற்று கொள்ள மாட்டோம்"என்று கூறியுள்ளது.
மேலும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், "ஈரான் அந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளாது எதிர்காலத்திலும் இதுதான் எங்கள் முடிவு" என கூறியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் இல்லையேல் 2015-ல் அந்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளும் நீக்கப்பட்டன.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணுஆயுத சோதனைகளை செய்ததாகவும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதாக குற்றச்சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT