Published : 11 Jan 2018 04:53 PM
Last Updated : 11 Jan 2018 04:53 PM
ஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து 8 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் தரப்பில், ''ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) அடுத்தத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. காலை 10.29 மணியளவில் ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியது. தென் பகுதியிலுள்ள கெர்மன் மாகாணத்தில் 5.1ஆக நிலநடுக்கம் பதிவாகியது. மற்ற இடங்களில் ரிக்டர் அளவு 5 ஆக பதிவாகியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணி வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். எனினும் பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
ஈரான் - இராக் எல்லை ஓரத்தில் கடந்த நவம்பர் மாதம் ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 620 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தகக்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT