Published : 07 Jan 2018 05:37 PM
Last Updated : 07 Jan 2018 05:37 PM
சனிக்கிழமையன்று தெற்கு செனகலின் காசாமன்ஸ் பிராந்தியத்தில் ஆயுதப் படையினரால் பதிமூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இப்பபகுதி கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதமோதல்களால் சூறையாடப்பட்டது என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
இந்த இளைஞர்கள் பயோட்டி காட்டுக்குள் மரங்களை வெட்டவந்தவர்கள். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர் 2 பேர் தப்பியோடிவிட்டனர் என செனகல் பிரஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.
தன்னிச்சையாக ஆயுதமேந்தி சுதந்திரத்திற்காகப் போராடும் கிளர்ச்சி இயக்கமான எம்எப்டிசி எனப்படும் காசாமன்ஸ் ஜனநாயகப் படை இயக்கத்திடமிருந்து மோதல் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள செனகல் ராணுவத்தின் சிறுபகுதியையேனும் தனியே பிரிக்கும் நிலை இனி இயலாத காரியமாகியுள்ளது என்றும் இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
எம்எப்டிசிகள், பிரிவினை கிளர்ச்சியாளர்கள், 1982 டிசம்பரில் சுதந்திரத்திற்காக போராடத் தொடங்கினர். ஆனால், செனகல் இராணுவத்தின் மீதான தாக்குதலை நீண்ட நாட்களாக நிறுத்திக்கொண்டது. அப்பகுதியில் தங்கள் இருப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டனர்.
2012 ல் ஜனாதிபதி மக்கி சால் பதவியேற்றபின் பல ஆண்டுகளுக்கு இந்த அமைதி திரும்பியது, மேலும் கிளர்ச்சியாளர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. "சமீபத்தில் எந்த பதட்டமும் இல்லை, எச்சரிக்கை அறிகுறிகள் இல்லை," இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏபிஎஸ் செய்தியின்படி 9 பேர் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிகுன்சார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் இறந்த உடல்கள் மார்ச்சுவரிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளை வெளியேற்றவும் இராணுவம் 150 துருப்புக்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியத்திற்கு பிறகு எம்எப்டிசி கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டபின்னர், ரோம்ஸின் சாண்ட் எஜிடியோ சமூக அமைப்பு ஏற்பாடு செய்துள்ள வாடிகன் சிறப்பு நடுவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஞாயிறன்று, செனகல் ஜனாதிபதி மாக்கி சால். காசாமன்ஸ் பகுதியில் கூடியுள்ள கிளர்ச்சிக்காரர்களிடம் ஒரு "திட்டவட்டமான சமாதானத்தை" உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
காசாமன்ஸ் சுதந்திரத்திற்கான கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மடிந்தனர், பொருளாதாரம் பெரும்வீழ்ச்சியடைந்தது. உள்நாட்டு மக்கள் பலர் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT