Last Updated : 24 Jan, 2018 03:18 PM

 

Published : 24 Jan 2018 03:18 PM
Last Updated : 24 Jan 2018 03:18 PM

ஆப்கனில் குழந்தைகள் தொண்டு நிறுவன கட்டிடம் அருகே தீவிரவாதத் தாக்குதல்:11 பேர் காயம்

ஆப்கானிஸ்தானிலுள்ள குழந்தைகள் தொண்டு நிறுவன அமைப்பான 'Save the Children' கட்டிடத்தின் அருகில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 11 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள், "ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்  நகரில் அமைந்துள்ளது குழந்தைகள் தொண்டு நிறுவனமான  Save the Children  கட்டிடம். இக்கட்டிடத்தின் அருகே தீவிரவாதிகள் இன்று (புதன்கிழமை) நடத்திய தாக்குதலில்  11 பேர் காயமடைந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதல் 'Save the Children' கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிர் இழப்பு ஏதும் இதுவரை நிகழவில்லை. துப்பாக்கி எந்திய  நபர்கள் கட்டிடத்துக்குள் நுழைந்துள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆப்கன் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல் நகரிலுள்ள புகழ்பெற்ற இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த தலிபான் தீவிரவாதிகள், நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.  இந்த நிலையில் மற்றுமொரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x