Published : 27 Nov 2023 02:06 PM
Last Updated : 27 Nov 2023 02:06 PM
கோலாலம்பூர்: டிசம்பர் 1-ம் தேதி முதல் மலேசியா செல்லும் இந்தியா, சீன நாட்டினருக்கு விசா அவசியமில்லை என்று அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் பேசிய அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எவ்வளவு காலம் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவும் சீனாவும் மலேசியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரச் சந்தையாகும். மலேசிய அரசின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 9.16 மில்லியன் சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இவர்களில், சீனாவில் இருந்து 4,98,540 பேர் மற்றும் 2,83,885 பேர் இந்தியாவில் இருந்தும் சென்றிருக்கிறார்கள். கரோனா தொற்றுக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டை பொறுத்தவரையில், சீனாவில் இருந்து 1.5 மில்லியன் மற்றும் இந்தியாவில் இருந்து 3,54,486 பேர் மலேசியா பயணித்துள்ளனர்.
முன்னதாக, மலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்து அதன் மந்தமான பொருளாதாரத்தை மேம்படுத்துவும், சுற்றுலாவை பெருக்கவும் இந்த ஆண்டில் விசா ஃப்ரீ நடைமுறையைச் செயல்படுத்தியது. இந்த விசா ஃப்ரீ நாடுகளில் சீனாவும் இந்தியாவும் அடக்கம். அதே முறையை மலேசியாவும் தற்போது பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நடைமுறைகளின்படி, சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மலேசியா செல்ல விசா வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, டிசம்பர் 1-ம் தேதி முதல் மலேசியா செல்லும் இந்தியர்கள், சீனர்களுக்கு விசா அவசியமில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT