Published : 25 Nov 2023 04:50 AM
Last Updated : 25 Nov 2023 04:50 AM
ஜெருசலேம்: பாலஸ்தீன கைதிகளுக்கான ஆணையர் கதுரா ஃபேர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு கரையில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 39 பாலஸ்தீன கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதற்கு பதிலாக, ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திய 240 பேரில்பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரை காசா-எகிப்து எல்லையில்ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்படைத்தனர். செஞ்சிலுவை சங்கத்திடம் பாலஸ்தீன கைதிகள் ஒப்படைக்கப் பட்ட பிறகு இஸ்ரேலிய கைதிகள் ஜெருசலேமுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.
விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளை அழைத்து வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வழங்கும். விடுவிக்கப்படும் கைதிகள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என்று இஸ்ரேல் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறுகையில், “இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்னும் முடிவடையவில்லை. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்குவந்துள்ள இந்த 4 நாள் போர் நிறுத்தம் என்பது ஒரு தற்காலிக நடவடிக்கையே.
காசாவின் வடக்கு முனைபகுதிகள் இன்னும் ஆபத்தான போர்மண்டலத்தில்தான் உள்ளது. ஏனெனில் அங்கு போர் விமானங்கள் மூலம்தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் உண்டு. ஹமாஸ் பிணைக் கைதிகளை தொடர்ந்து விடுவிக்கும்பட்சத்தில் இந்த போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 1,200 பேரை சுட்டுக்கொன்றதுடன், 240 பேரை சிறைபிடித்தனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13,300-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
அதிபர் ஜோ பைடன் ஆதரவுடன்..: இந்நிலையில், கத்தார் நாட்டின்சமரச முயற்சியாலும், அமெரிக்கஅதிபர் ஜோ பைடன் ஆதரவுடன் பலவாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் பலனாகவும் போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT