Published : 22 Nov 2023 06:16 AM
Last Updated : 22 Nov 2023 06:16 AM
ஜெருசலேம்: கடந்த 2008-ம் ஆண்டில் மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இதன் 15-வது ஆண்டு நினைவுதினம் வர உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ளஇஸ்ரேல் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2008 நவம்பரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பால் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல் மற்றும் அதன் கொடூரமான நடவடிக்கைகள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்களில் இன்னும் எதிரொலிக்கின்றன.
லஷ்கர் இ தொய்பா தடைசெய்யுங்கள் என்று இந்தியாவின் தரப்பில் கோரிக்கை வரவில்லையென்றாலும், அதை நாங்களாகவே தடை செய்துள்ளோம். தீவிரவாதத்தை வேரறுக்க உலக நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் எப்போதும் போரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT