Published : 13 Jan 2018 07:57 PM
Last Updated : 13 Jan 2018 07:57 PM
கெட்ட வார்த்தை ஒன்றைப் பிரயோகித்து அந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் குடியேறுவதை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதற்கு மன்னிப்பு கேட்குமாறு ஐக்கிய நாடுகள் சபையில் ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்தனர்.
ஐநா.வின் ஆப்பிரிக்க தூதுவர்கள் அமெரிக்க அதிபரின், “நிறவெறி, பிறர் மீதான கடும் துவேஷ, இழிவான” கருத்துக்கு எதிராக ஒன்று திரண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து கறுப்பர்களுக்கு எதிராகவும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் பேசியும் செயல்பட்டு வருவது மிகவும் கவலையளிக்கக் கூடியது என்று தெரிவித்தனர்.
ட்ரம்ப் தன் வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்திய 54 நாடுகள், அமெரிக்காவில் அனைத்து தரப்பிலிருந்தும் ட்ரம்பின் அருவருக்கத்தக்க இந்தப் பேச்சுக்குத் தெரிவித்த கண்டனங்களை வரவேற்றுள்ளனர். 4 மணி நேர ஐநா விவாதங்களுக்குப் பிறகு ட்ரம்ப் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியேற்ற சீர்த்திருத்தங்களுக்கான சந்திப்பின் போது, சட்டமியற்றுவோர் ஆப்பிரிக்க நாடுகள், எல் சால்வடோர், ஹைத்தி போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி பேசிய போது, ட்ரம்ப் கூறியது என்னவெனில் “why the United States should accept immigrants from "s***hole countries," rather than - for instance - wealthy and overwhelmingly white Norway”.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT