Published : 03 Jan 2018 11:53 AM
Last Updated : 03 Jan 2018 11:53 AM
இதுகுறித்து பெரு போலீஸ் தரப்பில், "பெருவில் 57 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பெரிய பள்ளத்தில் சரிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த 48 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்களை மீட்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ வெளியிட்ட அறிக்கையில்,
"இந்த விபத்து பெரும் வருத்தத்தை அளித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெருவில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சாலை விபத்துகளில் 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT