Published : 06 Jan 2018 02:32 PM
Last Updated : 06 Jan 2018 02:32 PM
அமெரிக்கா மெக்சிகோ இடையே எல்லைச் சுவரை விரிவுபடுத்த சுமார் 18 பில்லியன் டாலர்களை 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலீடு செய்ய இருக்கிறார்.
அமெரிக்கா மெக்சிகோவிக்கு இடையேயான எல்லை ஓரத்தில் சுமார் 1,552 கிலோமீட்டர்களுக்கு இந்த சுவர் எழுப்படவுள்ளது. இதற்கான பணி 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாட்டு எல்லையில் ஏறிக்கடக்க முடியாத, நுழைய முடியாத, உயரமான, பெரிய, அழகான எல்லைத் தடுப்புச் சுவர் எழுப்படும் என்று அறிவித்தார்.
இதற்கான ஒப்பந்தங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
மேலும் கட்டுமானத்திற்கு அமெரிக்க கட்டுமானப் பொருட்களையே பெரும்பாலும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த எல்லைத் தடுப்புச் சுவரின் செலவுகளை மெக்சிகோ ஏற்க வேண்டும் என்று ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவந்தார். ஆனால் மெக்சிகோ அதிபர் இதனை ஏற்க முடியாது என்று கூறியதால். அமெரிக்கர்களின் வரி பணத்தில் இந்தச் சுவர் எழுப்பப்பட இருப்பதாக சந்தேகம் தெரிவித்தனர்.
அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை தடுப்புச் சுவர் விவகாரத்தில் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT