Published : 24 Oct 2023 04:56 PM
Last Updated : 24 Oct 2023 04:56 PM

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகவும் வயதான நாய் 31-வது வயதில் மரணம்

கின்னஸ் சாதனை படைத்த நாய்

போர்ச்சுகல்: உலகின் மிகவும் வயதான நாயாக அறியப்பட்ட போபி, தனது 31 வது வயதில் மரணமடைந்திருப்பது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்லப் பிராணிகளை அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக நாய்களைக் கூறலாம். நாய்களைப் பிடிக்காத சிலருக்கும் கூட அவை பாசமாக வாலாட்டிக் கொண்டு வந்தால் அதை ரசிக்கத் தொடங்கி விடுவார்கள். ஒரு சிலர் பாசத்துக்காக வளர்ப்பார்கள். ஒரு சிலர் பாதுகாப்புக்காக வளர்ப்பார்கள்.

இந்த நிலையில், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரெப்ரியோ டி அல்டன்டிஜோ (Purebred Rafeiro do Alentejo) இன நாய் கடந்த கடந்த 1992-ம் ஆண்டு மே 11-ம் தேதி பிறந்தது.போபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாயின் அதிகாரபூர்வ வயது 31 ஆண்டுகள் மற்றும் 163 நாட்கள் ஆகும். ஒரு நாயின் இயல்பான ஆயுட்காலம் என்பது 12 முதல் 14 வயது வரை மட்டுமே எனக் கூறப்படுகிறது. ஆனால் போபி மட்டும் அதிக ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்துள்ளது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் போபிக்கு அதிக காலம் உயிர் வாழ்ந்த நாய் என்று கின்னஸ் சாதனை விருது அளிக்கப்பட்டது. போர்ச்சிக்கீசிய அரசின் செல்லப்பிராணிகளுக்கான பதிவேட்டிலும் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் போபி உடல்நலக் குறைவால் தனது 31-வது வயதில் இறந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி போபியின் உறவினர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x