Published : 24 Oct 2023 02:00 PM
Last Updated : 24 Oct 2023 02:00 PM

''தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு'' - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட சீனா

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி

பெய்ஜிங்: சர்வதேச விமர்சனங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட சீனா, தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டுக்கும் தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை உண்டு; ஆனால் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு உட்பட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யி, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருடனான தனது உரையாடலின் போது தெரிவித்தாக சீனா அரசு நடத்தும் ஜிங்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ் குழுவினர், இஸ்ரேலில் அக்.7-ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு பின்னர் சீனா இஸ்ரேலை ஆதாரிப்பது இதுவே முதல்முறை. கடந்த வாரத்தில் சீன அதிபர் ஜி ஜிங் பின், பாலஸ்தீன விவகாரத்துக்கு ஒரு விரிவான, நீடித்த, நிரந்தர தீர்வை விரைவாக எடுக்கவேண்டும் என்று எகிப்து மற்றும் அரபு நாடுகளுடன் இணைந்து ஒரு உடனடி பேர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய குடிமக்கள் உள்ளிட்ட 1,400 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவிக்காமலே இருந்தது. இதனிடையே இந்த இக்கட்டான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு எந்த ஆதரவும், அனுதாபமும் இல்லை என சீனாவின் வாங்க் யி தெரிவித்த சிலமணி நேரங்களுக்கு பின்னர், அமெரிக்க செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் சுக் சூமர், சீனா இந்தத் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலின் பக்கம் நிற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சீனாவின் இந்த நிலைப்பாட்டை இஸ்ரேல் வெளிப்படையாக கண்டித்திருந்தது. சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் ஊடக செய்திகள் குற்றித்து இஸ்ரேல் மிகவும் அதிருப்தி அடைகிறது என்று ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான பொறுப்பு இணை இயக்குநர் ரஃபி ஹர்பாஸ் மத்தியக்கிழக்கு விவகாரங்களுக்கான தூதர் ஜாய் ஜுன்னுடனான தொலைப்பேசி உரையாடலில் தெரிவித்தார்.

ஜிங்ஹூவாவின் செய்திப்படி, தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் மோதல்களால் கவலையடைந்துள்ளதாவும், இந்த மோதல் பொதுமக்கள் கொல்லப்படுவதால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்திருக்கும் வாங்க் யி, பொதுமக்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதையும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவதையும் மீண்டும் கண்டித்துள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த வார இறுதியில் உயர்மட்ட சந்திப்புகளுக்காக அமெரிக்கா செல்ல உள்ளநிலையில் சீனாவின் இந்த நிலைப்பாடு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அக்.26 முதல் 28ம் தேதி வரை அமெரிக்கா செல்லும் வாங்க், அங்கு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அந்தோணி பிளிங்கன், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் ஜாக் சல்லிவன் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x