Published : 18 Oct 2023 05:18 AM
Last Updated : 18 Oct 2023 05:18 AM
டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மகளின் உடலை மொபைல் போன் மூலம் அமெரிக்க தொழிலதிபர் கண்டுபிடித்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் இயால் வால்ட்மேன். இவர் மெலானக்ஸ் என்ற பெயரில் கணினி விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டில் இயால் வால்ட்மேன் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். அவரது இளைய மகள் டேனிலா (24).
இஸ்ரேலை சேர்ந்த நோம் என்பவரும் டேனிலாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இசை விழாவில் டேனிலாவும் நோமும் கலந்து கொண்டனர். அப்போது ஹமாஸ் தீவிரவாதிகள் இசை விழாவில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 270 பேர் உயிரிழந்தனர். டேனிலாவும் நோமும் காரில் தப்பிச் சென்றனர். அவர்களை வழிமறித்த ஹமாஸ் தீவிரவாதிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
டேனிலாவின் தந்தை இயால் வால்ட்மேன் தொழில்ரீதியாக இந்தோனேசியாவில் முகாமிட்டிருந்தார். மகளின் ஐபோனில் இருந்து அவருக்கு அபாய எச்சரிக்கை அழைப்பு வந்தது. உடனடியாக விமானம் மூலம் இஸ்ரேலுக்கு திரும்பிய வால்ட்மேன், மகள் பயன்படுத்திய ஐபோனின் இருப்பிடத்தை கண்டறியும் வசதி மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு மகள் டேனிலா, அவரதுகாதலர் டோமின் உடல்களை மட்டுமே அவரால் மீட்க முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment