Published : 18 Oct 2023 01:10 AM
Last Updated : 18 Oct 2023 01:10 AM
காசா: பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இதனை தாக்குதலுக்கு ஆளான மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் இதனை உறுதி செய்துள்ளது.
காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் விமானப்படை வான்வழியாக தாக்குதல் நடத்தியது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தும் இஸ்ரேல் தரப்பில் இது குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக ஹமாஸ் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் தோல்வி இதற்கு காரணம் என இஸ்ரேல் தரப்பில் சொல்லியுள்ளதாக தகவல். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இத்தகைய சூழலில்தான் இந்த மருத்துவமனையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். புகலிடம் தேடி அடைக்கலம் கொண்டிருந்த ஐநா பள்ளியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உலக நாடுகள் பலவேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றன. ஏராளமான இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Initial investigation by IDF shows the explosion in a hospital in Gaza was caused by a failed Hamas rocket launch, reports news organisation i24NEWS
— ANI (@ANI) October 17, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT