Last Updated : 01 Jan, 2018 05:41 PM

 

Published : 01 Jan 2018 05:41 PM
Last Updated : 01 Jan 2018 05:41 PM

எங்கள் நாட்டு மக்கள் மீது அனுதாபம் காட்ட ட்ரம்புக்கு உரிமை கிடையாது: ஈரான் அதிபர்

ஈரானியர்களின் மீது அனுதாபத்தைக் காட்ட ட்ரம்புக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அந் நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகவும்,  ஊழலுக்கு எதிராகவும் அரசை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹமடன், இஸ்பாஹன், கெர்மன்ஷா ஆகிய நகரங்களில் போராட்டம் பரவியது. இதில் இப்போராட்டங்களில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டனர்.

ஈரானில் நடைபெறும் போராட்டம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில், ''ஈரான் அரசு தங்களது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உலகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது'' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஈரானில் நடைபெறும் போராட்டம் குறித்து முதல் முறையாக அந் நாட்டு அதிபட ஹசன் ரவ்ஹானி கருத்தூ தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''அரசாங்காத்தை விமர்சிக்க மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது.  ஈரான் மக்கள் மீது அமெரிக்க அதிபர் தற்போது அனுதாபம் காட்டுகிறார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஈரானை தீவிரவாதிகளின் தேசம் என்று கூறியதை அவர் மறந்துவிட்டார். ஈரானுக்கு எதிராக இருக்கும் ஒரு நபருக்கு அதன் மக்கள் மீது அனுதாபம் காட்ட எந்த உரிமையும் கிடையாது''  என்றார்.

10 பேர் பலி

ஈரானில் நடைபெற்ற நடைபெற்ற போராட்டத்துக்கு நேற்று நள்ளிரவு மட்டும் 10 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x