Published : 15 Oct 2023 04:54 AM
Last Updated : 15 Oct 2023 04:54 AM
டெஹ்ரான்: காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வேறு முனைகளில் இருந்து போர் வெடிக்கலாம் என்று ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிராப் டொல்லாஹியான் தெரிவித்தார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே அமைந்துள்ளது காசா பகுதி. தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசா முனை ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதி வருகிறது. இந்த அமைப்புதான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், ஹமாஸுக்கு தேவையான நிதியுதவியைன் ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் புகார் கூறிவருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹமாஸ் குழுவினருக்கு ஆயுதப் பயிற்சியையும் ஈரான் வழங்கி வருவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.இந்நிலையில் கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி, காசாவின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் மிகப்பெரிய பதற்றத்தை அப்பகுதியில் உருவாக்கியுள்ளது. இந்த போரில் ஏராளமான மக்கள்உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
உலகின் பிற பகுதிகளிலும்..: இந்நிலையில், காசா மீதானதாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் உலகின் பிற பகுதிகளில் மோதல் வெடிக்கும். மேலும் பல போர் முனைகள் உருவாகும் என்றுஈரான் வெளியுறவு அமைச்சர்ஹொசைன் அமிராப் டொல்லாஹியான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லெபனானைச் சேர்ந்த போராளிக் குழுவான ஹெஸ்புல்லா குழுவை சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம், லெபனான் தலைநகர் பெய்ரூட் வந்தடைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஹொசைன் பேசியதாவது: காசாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் அங்கே போர்க் குற்றங்களை நிகழ்த்திவருகிறது. இந்த செயலால்வேறு சில பகுதிகளில் மோதல்கள்வெடிக்கலாம். அதற்கான தூண்டுதலை இஸ்ரேல் ஏற்படுத்துகிறது. இந்தத் தாக்குதலால் வேறு சில போர் முனைகள் உருவாகும்.
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா போராளிகள் குழுவினரால் இது நிகழ வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பது இஸ்ரேலின் கைகளில்தான் உள்ளது. இஸ்ரேல் உடனடியாக காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இவ்வாறு ஈரான் அமைச்சர் ஹொசைன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT