Last Updated : 20 Jan, 2018 04:03 PM

 

Published : 20 Jan 2018 04:03 PM
Last Updated : 20 Jan 2018 04:03 PM

எங்கள் பிராந்தியத்துக்கு அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க போர் கப்பல்: சீனா குற்றச்சாட்டு

அமெரிக்க போர்  கப்பல் ஒன்று  எங்கள் பிராந்தியப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாக  சீனா குற்றம்சாட்டியுள்ளது.

 

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில், "கடந்த ஜனவரி 17-ம் தேதி அமெரிக்க போர் கப்பல் ஒன்று  எங்கள் பிராந்தியத்துக்குட்பட்ட ஹுவாங்யன் பகுதியில் அனுமதி இல்லாமல் நுழைந்துள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாங்யன் தீவு, ஸ்கார்பாரோ ஷோல் என்றும் அழைக்கப்படுகிறது, தென்சீனக் கடலில் உள்ள இப்பிரதேசம் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவால் உரிமை கோரப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பிரதேசமாகும்.

இதே போன்று கடந்த ஆண்டு மே மாதம் தென் சீனக் கடலில் அமெரிக்க போர் கப்பல் ஒன்று நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் சீனாவின் எல்லைப் புறத்தில் அமெரிக்க போர் கப்பல் நுழைந்துள்ளது.

2017-ம் ஆண்டு முதல் அமெரிக்கா சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளால் ஏற்பட்ட கொரிய தீபகற்ப பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் இரு நாடுகளும் இணைந்து ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x