Published : 19 Dec 2017 01:00 PM
Last Updated : 19 Dec 2017 01:00 PM
ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு வடகொரியாவே காரணம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் குற்றச்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் உலகின் பல்வேறு வணிக நிறுவனங்களை முடக்கிப் போட்ட, 'வான்னா கிரை' எனும் பெயரிலான கணினி வைரஸ் பரவியது. அரசு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை முடங்கிப் போயின.
இதுகுறித்து உள்துறை பாதுகாப்பு ஆலோசகர் பி.போஸ்செர்ட் கூறும்போது, "ஆதாரங்களின் அடிப்படையில் ரான்சம்வேர் வைரஸ் பரவலுக்கு காரணம் யார் என்று கண்டறிவது நிர்வாகத்தின் பொறுப்பு. இதனை பிற தனியார் நிறுவனங்களும், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன" என்றார்.
ராம்சன்வேர் வைரஸ் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இதற்கு முன்னரே வடகொரியாவை குற்றச்சாட்டியது. இதனை திட்டவட்டமாக வடகொரியா மறுத்தது. இந்த நிலையில் ஆதாரத்துடன் வடகொரியாவை அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
உலக நாடுகளின் வர்த்தக நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை முடக்கிப்போட்ட ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வழிமுறையைக் கண்டறிந்த பிரிட்டன் இளைஞரை அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐயின் அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT