Published : 26 Sep 2023 07:48 PM
Last Updated : 26 Sep 2023 07:48 PM

ஹாங்சோ | விளையாட்டு அரங்கில் தவறவிடப்பட்ட மொபைல் போன் - தேடித் தந்த தன்னார்வலர்கள்!

படம்: எக்ஸ்

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஹாங் காங்கை சேர்ந்த 12 வயதான லியூ-டியான்-யி, செஸ் வீராங்கனை பங்கேற்றுள்ளார். போட்டியில் பங்கேற்ற சுமார் 10,000 இருக்கைகள் கொண்ட விளையாட்டு அரங்கில் அவர் தனது மொபைல் போனை தவறவிட்டுள்ளார்.

சுமார் 5.23 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் போனை தேடும் பணி நடந்துள்ளது. அந்த போனை அவர் ஸ்விட்ச்-ஆஃப் செய்து வைத்துள்ளார். அதனால் அதை தேடி எடுப்பது சவாலான காரியமாக அமைந்தது. இருப்பினும் சிறிதும் தளராத தன்னார்வலர்கள், மொபைல் போன் தவறவிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேடி கண்டுபிடிக்க லியூ-டியான்-யிக்கு உதவியுள்ளனர். இரவு முழுவதும் போனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான குப்பை பைகளை பார்த்துள்ளனர். அதில் ஒரு பையில் தான் அந்த போன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x