Published : 06 Dec 2017 02:28 PM
Last Updated : 06 Dec 2017 02:28 PM
ஜப்பானில் குமாம்டோ நகராட்சி உறுப்பினரான யுகா ஒகாட்டோ பணிக்கு வரும்போது அவரது கைக்குழந்தையை அழைத்து வந்ததற்காக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறியதாவது,
“நான் எனது நகரத்தின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜப்பானில் குழந்தை பராமரிப்பு வசதிகள், பணிச் சூழலை நட்புறவில் அணுகும் முறையை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுப்பேன் என்று உறுதியாக இருந்தேன்.
நான் கருவுற்ற பிறகு, நான் எனது பணியை தொடர்ந்து மேற்கொள்ள எனது சட்டசபையில் அவர்களது உதவியைக் கேட்டேன். எனது குழந்தைக்கு பால் புகட்ட தனியாக அறை ஒதுக்க வேண்டும். மேலும் பணியாளர்கள் அவர்களது குழந்தைகளைப் பராமரிக்க தனி அறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினேன்.
ஆனால் எனது திட்டங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதற்குப் பதிலாக அதனை நானே எதிர்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டேன்.
குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதி குறைபாட்டால் பல பெண்கள் தங்களது பணியைத் தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத காலத்தில் பெண்களுக்கு நிலைமை இன்னும் கடினமாகிறது. குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் குழந்தைகளை சேர்க்கக் கடினமாக விதிகளை வகுக்கிறார்கள்.
சரி கடைசியாக, பணி இடங்களுக்கு குழந்தைகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்றால் அங்கு முதலாளி தொழிலாளர்களால் குறை கூறப்படுகிறோம். இதன் காரணமாகவே பல பெண்கள் கருவுற்ற பிறகு பணியை விட்டுவிடுகிறார்கள்.
எனவே இதனை விளக்க, எனது ஏழு மாத குழந்தையை நகர சட்டசபை கூட்டத்துக்கு என்னுடன் அழைத்துச் சென்றிருந்தேன். எனக்கு நம்பிக்கை இருந்தது. இதன் மூலம் குழந்தை வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் துன்பங்களை எல்லோருக்கும் புரிய வைக்க முடியும் என்று நினைத்தேன்.
நான் எனது குழந்தையுடன் நகர சபையில் அமர்ந்திருந்தபோது, குழந்தையுடன் பணிக்குச் செல்லும் அனைத்து பெண்களின் நிலைமையும் முன்னெடுக்க நினைத்தேன். சபை கூடி 15 நிமிடங்கள்தான் சென்றிருக்கும். எனது மகன் அமைதியாகதான் இருந்தான். அதனால் நான் நம்பிக்கையாகவே அமர்ந்திருந்தேன்.
அப்போது சபை ஊழியர் ஒருவர் ஓடி வந்து இப்படி செய்யாதீர்கள் என்றார். எனது குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே போகும்படி சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நான் வெளியேற முடியாது. சபையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று அவர்களிடம் கூறினேன். இருப்பினும் நான் வெளியேறினேன் ” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT