Last Updated : 14 Dec, 2017 03:37 PM

 

Published : 14 Dec 2017 03:37 PM
Last Updated : 14 Dec 2017 03:37 PM

மியான்மரில் கலவரம் ஏற்பட்ட ஒரு மாதத்தில் மட்டும் 6,700 ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்

மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு மாதத்தில் மட்டும் 6,700 பேர் கொல்லப்பட்டதாக  தனியார் மனித உரிமை அமைப்பு ( Doctors Without Borders ) கூறியுள்ளது.

இதுகுறித்து தனியார் மனித உரிமை அமைப்பு (Doctors Without Borders) இன்று (வியாழக்கிழமை) கூறும்போது, ''மியான்மரில் கலவரம் ஏற்பட்ட ராக்கைன் மாவட்டத்தில்  ஒரு மாதத்தில் மட்டும் 6,700 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 730 பேர் குழந்தைகள் (ஐந்து வயதுக்குக் குறைவானவர்கள்)'' என்று கூறப்பட்டுள்ளது.

மியான்மரின் ராக்கைன் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும்,  அவர்களை இனப்படுகொலை செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை உடனடியாக மியான்மர் அரசு நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் பெண்களை அந்நாட்டு ராணுவ வீர்ரகள் திட்டமிட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அங்கிருந்து தப்பி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறியுள்ள சிறுமிகள், பெண்கள் உட்பட 29 பேரிடம் அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) செய்தி நிறுவனம் சமீபத்தில்  நடத்திய நேர்காணலில்  வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x