Last Updated : 30 Dec, 2017 03:53 PM

 

Published : 30 Dec 2017 03:53 PM
Last Updated : 30 Dec 2017 03:53 PM

மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளியுங்கள்: ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு அந் நாட்டு அரசு மதிப்பளிக்க வேண்டும். உலகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஈரானில் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதையடுத்து மக்கள் பல இடங்களில் மக்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தப் போராட்டம் ஹமடன், இஸ்பாஹன், கெர்மன்ஷா ஆகிய நகரங்களில் போராட்டம் பரவியுள்ளது. இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரானில் நடைபெறும் போராட்டம் குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஈரானிய மக்கள் அமைதியான முறையில் ஊழல் மற்றும் தீவிரவாதத்துக்கு உதவி செய்யும் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் அரசு தங்களது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உலகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நவீன ஏவுகணை ஒன்றைச் சோதித்துப் பார்த்தது என்பதற்காக ஈரான் மீது புதிய தடைகளை விதித்திருக்கிறது அமெரிக்கா. மேலும் அந் நாட்டுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.

மேலும் ஏமனில் ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு ஈரான் நிதியுதவி அளித்து வருவதாக அமெரிக்காவும், சவுதியும் அந்நாட்டின் மீது குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x