Published : 11 Dec 2017 08:19 PM
Last Updated : 11 Dec 2017 08:19 PM
நெரிசல் மிகுந்த மேன்ஹட்டன் நகரப்பகுதியில் குண்டு வெடிப்பு நடந்ததாகவும் அதனை விசாரித்து வருவதாகவும் நியூயார்க் சிட்டி போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மான்ஹட்டன் சப்-வே நடைபாதையில் கிடந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்கச்செய்யப்பட்டதாக சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டுவெடிப்பையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து அவசரகதியில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இது பைப் வெடிகுண்டு என்றும் நியூயார்க் சிட்டி, 42-வது தெருவின் 7-8 அவென்யுவை இணைக்கும் சுரங்கப்பாதையில் திங்கள் காலை அமெரிக்க நேரம் 7.30 மணிக்கு இந்த பைப் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் சுரங்கப்பாதை முழுதும் புகை மண்டலமானது.
கைது செய்யப்பட்ட நபருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பையடுத்து நாட்டின் மிகப்பெரிய பஸ் முனையம் மூடப்பட்டுள்ளது, டைம்ஸ் ஸ்கொயர் அருகே உள்ள சுரங்கபாதைகளில் மக்கள் செல்ல அனுமதி தடுக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் தகவல்கள் அதிபர் ட்ரம்புக்கு தெரியப்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT